புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம்; விசாரணை அறிக்கை கையளிப்பு

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தமது பரிந்துரைகளை விரைவில் முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை இன்று (21) ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் தமது ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு பிற்போடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து...

கொழும்பில் ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ !

மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத்...

உழ்ஹிய்யா கடமை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய வழிகாட்டல்

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இஸ்லாத்தின் முக்கிய சுன்னத்தான உழ்ஹிய்யா (குர்பானி)  நிறைவேற்றுவது...

ஆண்டுதோறும் 15,000 க்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 15,000 முதல் 18,000 வரையிலான புதிய புற்றுநோயாளிகள்...