பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம்

Date:

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும்.

பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 (வியாழக்கிழமை) நடைப்பெறவுள்ளது.

வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது.

இதற்கமைய இம்முறை  அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் 5,464 வேட்பாளர்கள், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3357 வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 8821 பேர் போட்டியிடுகின்றனர்.

இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (26) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படுவதால் தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் பொதுத்தேர்தல் நிறைவடையும் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை நாளை முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தபால்மூலம் விநியோகிக்கப்படும்.

இம்முறை பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், 2,1160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 738,050 அரச உத்தியோகஸ்த்தர்கள் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் புதன்கிழமை (30) நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...