உலக நக்ஷபந்தியா தரீக்காவின் 41 ஆவது தலைவர் சங்கைக்குரிய மௌலானா செய்யத் ஷேக் மெஹ்மத் ஆதில் ரப்பானி அவர்கள் 5 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
நேற்று (29) இலங்கை வந்துசேர்ந்த மௌலானா அவர்கள் இன்று தெவட்டகஹ உஸ்மான் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் மற்றும் பள்ளிவாசலுக்கும், போர்வை தர்காவுக்கும் விஜயம் செய்தார்.
நாளை அவர் கெச்சிமலை, பேருவளை, களுத்துறை, தர்கா நகர் பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
வெள்ளிக்கிழமை தெவட்டகஹ உஸ்மான் வலியுல்லா ஜும்ஆ பள்ளிவாசலில் மௌலானாவின் குத்பா பிரசங்கம் நடைபெறவுள்ளது.
குத்புல் அக்தாப் கௌஸுல் அ லம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி மற்றும் மௌலானா ரூமி அவர்களின் வழித்தோன்றலில் உதித்த சங்கைக்குரிய மௌலானா அஸ்ஸெய்யத் ஷெய்ஹ் நாஸிம் அல் ஹக்கானி அவர்களின் புதல்வராகிய மௌலானா செய்யத் ஷேக் முஹம்மத் ஆதில் ரப்பானி அவர்களின் இலங்கைக்கான ஆறாவது விஜயம் இதுவாகும்.
இதற்கு முந்திய அன்னாரது விஜயம் கடந்த வருடம் ஒக்டோபரில் இடம்பெற்றிருந்தது. இவரது தந்தை இலங்கைக்கு 13 தடவைகள் விஜயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.