வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க SOUTH MARITIME TRAINING INSTITUTE (SMTI)இனால் கடல்சார் துறை வேலைவாய்ப்பு பற்றிய முழுநாள் கருத்தரங்கொன்று புத்தளம் நகர மண்டபத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி மு.ப. 09.30 மணிமுதல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இத்துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர் யுவதிகள் (வயது 17-24) இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.