புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!

Date:

நாட்டின் புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 16 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில், ஜி.பி.சபுதந்திரி – பிரதமரின் செயலாளர்,  டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கே. எம். எம் சிறிவர்தன – நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,  ஜே. எம் திலகா ஜயசுந்தர – ​​கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஏ. எம். பி. எம். பி அத்தபத்து – புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பி. கே பிரபாத் சந்திரகீர்த்தி – தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, எச். எஸ்.எஸ்.துய்யகொன்னா – பாதுகாப்பு அமைச்சு, டி. டபிள்யூ. ஆர். பி செனவிரத்ன – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு, யூ. ஜி ரஞ்சித் ஆரியரத்ன – நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு,  பேராசிரியர் கே.டி. எம். உதயங்க ஹேமபால – எரிசக்தி அமைச்சு,  எஸ். ஆலோக பண்டார – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு எஸ். எம் பியதிஸ்ஸ – தொழிலாளர் அமைச்சு மற்றும்  ஏ. விமலேந்திரராஜா – வர்த்தகம், வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டி. பி. விக்கிரமசிங்க – விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, கே. எம். ஜி. எஸ். என் களுவெவ – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஏ. எச். எம். யு அருண பண்டார – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு, அருணி ரணராஜா – வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...