வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

Date:

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

அதன்படி இன்று முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து நாளை மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது.

இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...