காசாவில் ஒரு மில்லியன் குழந்தைகள் அவல நிலையில்: உடனடி போர் நிறுத்தத்திற்கு யுனிசெஃப் அழைப்பு

Date:

காசாவில்  கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக  யுனிசெப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய தங்குமிடம், தண்ணீர் மற்றும் பாதுகாப்பு இல்லாத அவர்களின் நிலைமைகளை எடுத்துரைத்த அவர் உடனடி போர் நிறுத்தத்தின் அவசியத்தையும்  வலியுறுத்தினார்.

உலகளாவிய குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தனது புதிய மனிதாபிமான பதில் மொழி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘குழந்தைகளுக்கு போர் நிறுத்தம் தேவை என்றும் அவர்களின் துன்பம் முடிவுக்கு வர வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

2025ஆம் ஆண்டில் உலகின் 146 நாடுகளில் உள்ள 10 கோடி 9 லட்சம் குழந்தைகளுக்கு உயிர் காக்கும் உதவிகளை வழங்க 990 கோடி ரூபாய் நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது.

வரும் ஆண்டில் பல நாடுகள் மோதல்கள், காலநிலை மாற்றம், இடப்பெயர்வு மற்றும் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில், இந்த நிதி மிகவும் அவசியமாகும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

உலகளவில் 21 கோடி 30 லட்சம் குழந்தைகள் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில், இந்த நிதி மூலம் 10 கோடி 9 லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மனிதாபிமான தேவைகள் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் 5 கோடி 75 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் பிறந்துள்ளனர்.

2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உடனடி நடவடிக்கை அவசியமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – டில்வின் சில்வா சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று (1) முற்பகல் மக்கள்...

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணைக்கு முன்பே நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத்...

ஒன்லைன் உடனடி கடன் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடுமையான திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் காரணமாக...