COPF குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

Date:

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024 டிசம்பர் 06ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக குழுவின் தவிசாளராக ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பணியாற்றுவதற்கான ஏனைய உறுப்பினர்களின் பெயர்களையும் சபாநாயகர் இன்று (18) சபையில் அறிவித்தார்.

இதற்கமைய, ஹர்ஷண சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிரி பஸ்நாயக்க, திலிண சமரகோன், சட்டத்தரணி (செல்வி) லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...