விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2024-12-02 ஆம் ஆண்டு நிலவரப்படி, தோராயமாக 91,300 ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையாகவும், 86,225 ஏக்கர் நெற்பயிர்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், 173 சிறுபாசன வாய்க்கால்கள் முழுமையாகவும், 1,148 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 750 ஏக்கர் மரக்கறி பயிர்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர்ச்செய்கையில் 02 ஹெக்டேயர் வரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.40,000/- வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், பெரியவெங்காயம் மற்றும் சோயாபீன் ஆகிய 01 ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) வரையிலான 05 வகையான பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.40,000/- நஷ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.