காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையை எரித்த இஸ்ரேல்; நோயாளிகள் அவசரமாக வெளியேற்றம்!

Date:

காசாவின் வடக்குப் பகுதியில் செயல்படும் மருத்துவமனையை இஸ்ரேல் படைகள் தீயிட்டு எரித்தன.

அதேநேரம் காசாவில் பல்வேறு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு காஸாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதோடு நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி உள்ளது.

மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்ட இந்த சம்பவத்தை ஹமாஸ் நடத்தும் பலஸ்தீன சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

சுகாதார அமைச்சக இயக்குனர் முனீர் அல் பர்ஷ், ‘இஸ்ரேல் படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து தீயிட்டு எரித்து வருகிறன’ என குற்றம் சாட்டி உள்ளார். காசாவில் மற்ற இடங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

ஹமாஸால் நியமிக்கப்பட்ட துணை சுகாதார அமைச்சர் யூசுப் அபு எல் ரிஷ் கூறுகையில்,  இஸ்ரேலியப் படைகள் அறுவை சிகிச்சைத் துறை மற்றும் ஆய்வகம் மற்றும் களஞ்சியசாலைக்கு தீ வைத்ததாகக் கூறினார்.

வெளியேற்றப்பட்ட சில நோயாளிகள் ஒக்ஸிஜனில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் இறக்கலாம் எனவும் கூறினார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய இராணுவம் மறுத்துள்ளது. அந்த மருத்துவமனை ஹமாஸ்  அமைப்பின் தளமாக செயல்பட்டு வருகிறது என்றும் குற்றச்சாட்டி உள்ளது.

 

 

 

 

 

Popular

More like this
Related

கடந்த 9 மாதங்களில் வீதி விபத்துக்களில் 1,897 பேர் உயிரிழப்பு!

கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக...

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள்...

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத பல முக்கியஸ்தர்கள் பட்டியல் வெளியீடு

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி 2024ஆம் ஆண்டுக்கான...