சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அயர்லாந்து அதிகாரப்பூர்வமாக இணைந்துகொண்டுள்ளது.
கடந்த வருடம் அயர்லாந்து பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது. தென்னாப்பிரிக்கா முதன்முதலில் டிசம்பர் 2023இல் இஸ்ரேலுக்கு எதிராக தனது வழக்கைத் தாக்கல் செய்தது.
காசா பகுதியில் தொடர்ச்சியான தாக்குதலின் போது இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டியது. இஸ்ரேல் ‘இனப்படுகொலையில் ஈடுபடவில்லை’ என்பதை கடுமையாக மறுத்து, நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்துப் போராடி வருகிறது.
நிகராகுவா, கொலம்பியா, லிபியா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் இந்த வழக்கில் இணைந்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உடனடி போர் நிறுத்தத்தைக் கோரும் தீர்மானத்தை மீறி, 2023 அக்டோபரில் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் காசா மீது தனது மிருகத்தனமான தாக்குதலைத் தொடர்கிறது.
உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 46,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இஸ்ரேலிய தாக்குதல் உணவு சுத்தமான நீர் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.