இஸ்லாஹியா கலாபீடம் மலேசிய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை!

Date:

மாதம்பை இஸ்லாஹிய்யா கலாபீடம் மற்றும் மலேசியாவில் அமைந்துள்ள மலாக்கா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் (Universiti Islam Melaka -UNIMEL) ஆகிய இரு நிறுவனங்களிற்குமிடையிலான புரிந்துணர்வு உன்படிக்கை (MoU) கைச்சாத்திடும் நிகழ்வு மலாக்கா இஸ்லாம் பல்கலைக்கழக உபவேந்தர் Prof. Datuk Dr. Haji Mohf Taib Bin Haji Dora தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் (The Lakshman Kadirgamar Institute) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக முன்னாள் ஈரான் நாட்டுக்கான தூதுவரும், சோனக இஸ்லாமிய கலாச்சார இல்லத்தின் (Moors Islamic Cultural Home) தலைவருமான உமர் காமில் அவர்களும், மலாக்கா இஸ்லாம் பல்கலைக்கழகதத்தின் துணைவேந்தர் கலாநிதி அனஸ் பின் தாஜூதீன் அவர்களும் இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் ஆதம் அவர்களும் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இஸ்லாஹிய்யா கலாபீடத்தின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இஸ்லாஹிய்யாவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும், இஸ்லாஹிய்யா யூடியூப் தளத்திலும் நேரடி ஒளிபரப்பு (Live Streaming) செய்யப்படவுள்ளது.

 

 

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...