மூத்த எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான அந்தனி ஜீவா காலமானார்

Date:

எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான அந்தனி ஜீவா அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) காலமானார்.

இறுதிகிரியைகள் நாளை 12ஆம் திகதி தெஹிவளையில் இடம்பெறும்.

எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமை படைத்தவர் அந்தனி ஜீவா.

கலையையும், இலக்கியத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காக இல்லாமல், சமூக விழிப்புணர்வுக்கான ஊடகமாகக் கருதித் தமது பணியை மேற்கொண்டர்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும் மலையகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தனி ஜீவா அவர்கள்  1960 இல் எழுதத் தொடங்கி  கண்டியூர் கண்ணன், மாத்தளை கௌதமன், கவிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

தினகரன், சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

நாடகத்துறையிலும் பங்களித்த இவர் எழுதிய முதல் நாடகமான ‘முள்ளில் ரோஜா’ 1970 இல் மேடையேறியது.

1970களில் தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்ட அக்கினிப்பூக்கள், வீணை அழுகின்றது முதலான நாடகங்களை உருவாக்கினார்.

இவர் அரச சாகித்திய விருது, அரச இலக்கிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...