கன மழை காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு

Date:

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக  உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று (12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளதாகவும், அதனை தேவையான மட்டத்தில் பேணுமாறு குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் பணிப்புரைக்கு அமைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.

அடுத்த சில மணித்தியாலங்களில் பெய்யும் மழையின் அளவை பொறுத்தே வான்தவுகளை திறப்பதில் மாற்றம் ஏற்படலாம் என தீப்தா ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...