மறைந்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களிடம் இருந்த சிறந்த குணம், ஒழுக்கம், உபசரிப்பு மற்றும் மாற்று மத சகோதரர்களை அனுகும் விடயங்களை கவனிக்கும் போது ஒரு முன்மாதிரியான மனிதரை சமூகம் இழந்து நிற்கிறது.
அவருக்கு நிகர் அவரே அவரின் இழப்பு நாட்டிற்கும் சமூகத்திற்கும் குறிப்பாக புத்தளத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தனது அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 30 வருடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை மற்றும் புத்தளம் மாவட்டத்தை வழி நடாத்திய முன்னாள் தலைவராகவும் தற்போதய நிறைவேற்றுக் குழவின் உயர்பீட உறுப்பினராகவும் 15 வருடம் சர்வ மதக் குழுவின் சமயத் தலைவராகவும் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும் இருந்து பல சேவைகளை நாட்டிற்கும் புத்தளத்திற்கும் ஆற்றிய அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் (13) இறையழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
உலமாக்களை பாராட்டி ஊக்குவிப்பதிலும் நிர்வாக மற்றும் அரசியல் முறைமைகளை கையாளுவதிலும் அவர்கள் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்.
அன்னாரின் குடும்பத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.