பௌசுல் ஹக் ஹஜ் கமிட்டி உறுப்பினராக இருப்பதற்கு இடைக்காலத் தடை..!

Date:

புதிய ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் பௌசுல் ஹக், கமிட்டியில் தொடர்ந்தும் உறுப்பினராக இருப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதி பி. குமார் ரத்னம் அவர்களினால் இன்று (22) இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 16 வருடங்களாக கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ட்ரஸ்டியாக கடமையாற்றிய போது கணக்கறிக்கையை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துக்கு முறையாக சமர்ப்பிக்காததை வைத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி ஜும்ஆ மஸ்ஜிதின் ட்ரஸ்டியாக பணியாற்றிய காலத்தில் முஸ்லிம் நம்பிக்கை நிதியத்துக்கு (MCF) பங்களிப்பு செய்யாமையினால் வக்பு சபையினால் கடந்த வருடம் அவர் ட்ரஸ்டி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் தலைமையில் புத்தசாசன மத விவகார அமைச்சினால் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட ஹஜ் குழுவில் அல்ஹாஜ் பௌசுல் ஹக் அவர்களும் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி: https://tamil.newsnow.lk/2024/12/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...