பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

Date:

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அநுராதபுரம் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

யாழில் வைத்து சிறப்புப் பொலிஸ் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் மீது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக்  குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...