சிரியாவின் இடைக்கால ஜனாதிபதியாக அல்-ஷாரா நியமனம்..!

Date:

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிரியாவில் இடம்பெற்ற மக்கள் புரட்சிக்கு தலைமை தாங்கிய அபு முகம்மத் அல்ஜுலானி என்ற பெயருடைய அஹ்மத் அல்-ஷாரா என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட பிரதான புரட்சிக் குழுவின் தலைவர் நேற்று (29) சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் இடைக்கால ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 60 ஆண்டுகளாக சிரியாவின் பஷர் அல்-அசாத் குடும்பத்தினர் மேற்கொண்ட கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அல்-ஷாரா தலைமையிலான புரட்சிக்குழுவினர் சிரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன் மூலம் ஹிட்லரின் அடக்குமுறைகளையும் மிஞ்சும் அளவுக்கு மனித படுகொலைகளையும் சைட்னயா சித்திரவதை கொலைக் கூடங்களையும் ஆறு தசாப்த காலமாக செய்து வந்த கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதோடு சிரியாவின் பல இலட்சம் அகதிகள் நாட்டுக்கு திரும்பி வரும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

சிரியாவின் ஸ்திரத்தன்மையை பேணும் வகையில் அல்-ஷாராவின் தலைமையிலான புரட்சிக்குழுவும் இடைக்கால அரசும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிராந்திய அரசுகளும் சர்வதேச சமூகங்களும் இந்த புதிய மாற்றத்தை உன்னிப்பாக அவதானிக்கின்ற அதேவேளை துருக்கி, லிபியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பிராந்திய அரபு நாடுகளும் அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி போன்ற மேற்கத்தைய வல்லரசு நாடுகளும் அல் ஷாரா தலைமையோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதுடன் அடிக்கடி சந்திப்புக்களையும் மேற்கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் (29) ‘அல் ஷாரா’ புதிய இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நியமனத்தின் மூலம் இதுவரை இயங்கி வந்த புரட்சிக்குழுக்கள் ஆயுதக் குழுக்கள் எல்லாம் கலைக்கப்பட்டு சிரியாவின் அரசின் கீழ் இயங்குகின்ற இராணுவமாக செயல்படுவதாக உடன்பாடு காணப்பட்டுள்ளது.

அல் ஷாரா தலைமையில் இயங்கி வந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற அமைப்பு உட்பட இந்த அடிப்படையில் கலைக்கப்பட்டுள்ளது.

ஆசாத்துடைய செல்வாக்கு மிக்க பாத் இராணுவ அமைப்புக்களும் முற்று முழுதாக கலைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் மூலம் சிரியாவின் புதிய உதயம் ஏற்பட்டிருக்கின்றது.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு புதிய தேர்தல் நடைபெறும் வரை அல்ஷாரா தன்னுடைய தற்காலிக பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பு தயாரிக்கின்ற பணிகள் 4 வருடங்கள் எடுக்கும் எனவும் அதனைத் தொடர்ந்தே சிரியாவில் சுதந்திரமான தேர்தல் ஒன்று நடைபெறும் எனவும் நேற்றைய தினம் நடைபெற்ற பதவியேற்கும் நிகழ்வில் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...