“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை : பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

Date:

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 26 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி, “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளை பேணி வந்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (20) கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர், கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய பிரதான சந்தேக நபரும், சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு உதவி செய்த வேன் சாரதியும் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...