இன்று முதல் மீண்டும் இந்திய – இலங்கை கப்பல் சேவை ஆரம்பம்

Date:

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகங்கள் இடையிலான இந்திய, இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது.இன்று (22) காலை நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

83 பயணிகள் குறித்த கப்பலில் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்ததுள்ளதுடன், 83 பேர் இலங்கையிலிருந்து அங்கு செல்லவுள்ளனர்.

இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க் கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...