ஐந்து மாதங்களின் பின்னர் ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிக்கிரியை: இறுதி சடங்கில் லெபனானில் நுழைந்த போர் விமானங்கள்!

Date:

லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிக் கிரியைகள் ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலோடு நேற்று லெபனானில் இடம்பெற்றன.

லெபனானின் தஹிய்யாவிலுள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது இஸ்ரேல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி மேற்கொண்ட விமானத் தாக்குதலில் நசரல்லா கொல்லப்பட்டார்.

என்றாலும் சுமார் நான்கு மாதங்கள் கடந்த பின்னர் நேற்று ஹஸன் நசரல்லாவினதும் அவர் கொல்லப்பட்டதோடு அந்த அமைப்பின் தலைமைப் பதவியை ஏற்ற காசெம் சபயிடினதும் இறுதிக் கிரியைகளும் இடம்பெற்றன.

லெபனானின் கமிலி சமிலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த இறுதிக்கிரியைகளில் ஈரான் வௌிவிவிகார அமைச்சர் அப்பாசி, சபாநாயகர் முஹம்மட் பாக்கர் காலிப் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அடங்கலாக ஈரான், ஈராக், யெமன் உடபட பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

ஹிஸ்புல்லாவின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் நசரல்லா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அந்த அமைப்பை வழிநடத்தி, இராணுவ அமைப்பாகவும், லெபனானின் ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் உருவாக்கியவராவார்.

மேலும் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேலால் கொல்லப்பட்டாலும் கூட பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது இறுதி சடங்கு நிகழ்வு நடத்தப்படாமல் தள்ளிப்போனது.

இந்நிலையில் தான் 5 மாதங்களுக்கு பின்னர், லெபனானில் உள்ள மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் கேமிலி சாமுன் ஸ்போர்ட் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த இறுதி சடங்கு நடந்தது.

இந்த மைதானத்தில் மொத்தம் 55 ஆயிரம் சீட் உள்ளன. அத்தனை சீட்டுகளும் நிரம்பி இருந்தன. இந்த இறுதி சடங்கின்போது ஹசன் நஸ்ரல்லாவின் பேனர்கள், ஹெஸ்புல்லாவின் கொடிகளை மக்கள் கையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் தான் இறுதி சடங்கு நடக்கும்போதே லெபனானுக்குள் இஸ்ரேல் போர் விமானங்கள் நுழைந்தன. இஸ்ரேலின் எஃப் 16 ரக 4எஸ் போர் விமானங்கள் அதிரடியாக பெய்ரூட்டில் நுழைந்து மின்னல் வேகத்தில் பறந்தன. ஹசன் நஸ்ரல்லாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு இருந்த மக்கள் இந்த போர் விமானங்களை பார்த்து சிதறி ஓடினர்.

இதன் மூலம் எத்தனை நாட்டு தலைவர்கள் இணைந்தாலும் கூட எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற மெசேஜை அனுப்புவதற்காக மட்டுமே ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் விமானங்களை அனுப்பி உள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...