பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ஸ்ரீலங்கன் விமானங்களால் பாரிய இழப்பு!

Date:

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மூன்று விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த போதிலும், அவற்றிற்காக மாதாந்தம் 9 இலட்சம் டொலர்கள் தவணைகளாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (25) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார்.

“ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் மொத்தம் 22 விமானங்கள் உள்ளது. தற்போது, பிரதான விமான சேவைக்கு 3,194 பணியாளர்களும், மூலோபாய வணிக அலகுகளில் 2,862 பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.

விமான சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 2025 முதல் ஐந்தாண்டு திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அமைச்சு ஆய்வு செய்து வருகின்றது.

அதன்படி, இந்த ஐந்து ஆண்டுகளில் விமான சேவையானது செயற்பாட்டு இலாபத்தையும் அரசின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றது” என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...