நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Date:

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...