சிறுநீரக நோயால் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பு

Date:

சிறுநீராக நோயால் நாட்டில் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பதாக தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக 2023 ஆம் ஆண்டின் தரவுகளில் தெரிய வந்திருந்தது. இந்நிலையில்,அதே ஆண்டில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 1,626 பேர் உயிரிழந்திருந்தனர்.

2023 – 2024 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,582 ஆகக் காணப்பட்டது. 300 பேர் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்பட்டிருந்தனர்.வடமத்திய மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில்,2006 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையில் உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.

“விழிப்புடன் இருங்கள், ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள், சிறுநீரகங்களைக் காப்பாற்றுங்கள்” என்ற கருப்பொருளில் இம்முறை சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...