இன்று முதல் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் சூரியன்!

Date:

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது.

இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ,மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

தென் மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய ,சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய , சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நீர்கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Popular

More like this
Related

ஆசிய தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்று கம்பஹா சிறுவன் ஃபஹத் நவாஸ் சாதனை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள ‘6 வது ஆசிய உள்ளக...

அனோஜன் விவகாரம்; பொதுமன்னிப்பு வழங்க தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை தொழிலாளியான அனோஜன் சிவராசாவிற்கு...

மீண்டும் தலைதூக்கும் டெங்கு அபாயம்!

நாட்டிலிருந்து பதிவாகும் மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இன்று 28 ஆம்...

2030-க்குள் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகளையும் 8 பில்லியன் டொலர் வருமானத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது அரசாங்கம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்தி, அதன் பொருளாதார நன்மைகளை உள்ளூர் மக்களுக்கு...