அமெரிக்க வரிகளின் தாக்கம் குறித்து கலந்துரையாட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இங்கு அமெரிக்கா வித்துள்ள புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தக் கூட்டம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது X கணக்கில் இதை தெரிவித்துள்ளார்

இன்று காலை, 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

இம்முறை உயர்தரப் பரீட்சையில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர்களின் இருப்பிடம் மாற்றமடைந்திருந்தால்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை.

இன்றையதினம் (22) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை...

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...