வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 713 பேர் உயிரிழப்பு

Date:

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 685 வீதி விபத்துகளில் 713 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 744 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீதி விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 28ஆக குறைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் சித்திரை புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற 103 வீதி விபத்துகளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வீதி விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 23ஆக  குறைவடைந்துள்ளன.

அத்துடன், பதிவான மொத்த வீதி விபத்துகளில், மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துகளால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 781 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களும் 194 பாதசாரிகளும் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...