நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று இரவு (22) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
காயமடைந்த டொன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்றிரவு செய்தி வெளியாகி இருந்த போதிலும் பொலிஸார் அதனை பின்னர் மறுத்திருந்தனர்.
இந்நிலையில்,டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.