ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை தனது விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வியட்நாமில் ‘உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு’ என்ற தொனிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.