பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்

Date:

பஹல்காம்  தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள இராணுவ தளங்களில்  பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இத்தகைய பரபாப்பான சூழலில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவியை வழங்கியதாக தகவல் வெளியானது.

கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு நேற்று முன்தினம் துருக்கி விமானப்படைக்கு சொந்தமான ‘சி -130 ஹெர்குலிஸ்’ போர் விமானம் சென்றது அதில், ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தபோதிலும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட இராணுவ தளவாடங்கள் பற்றிய விபரங்களை வெளியாகவில்லை.

இந்த நிலையில், போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது. சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் துருக்கி விளக்கமளித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...