காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சகிக்க முடியாதது: இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 3 நட்பு நாடுகள்

Date:

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மோசமான விதத்தில் விரிவுபடுத்தினால், உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவரும் என பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக எச்சரித்துள்ளன.

பிரிட்டிஸ் பிரதமர் பிரான்ஸ், கனடா தலைவர்கள் இணைந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும், மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் செல்வதற்கு உடனடியாக அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் 11 வார கால முற்றுகை மற்றும் தடையின் பின்னர் அடிப்படை எண்ணிக்கையிலான உணவுகளை காசாவிற்குள் அனுமதிக்கும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

எனினும் இது போதுமானதல்ல என தெரிவித்துள்ள மூன்று நாடுகளும் பொதுமக்களிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது இது சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதற்கு ஒப்பானது என தெரிவித்துள்ளன.

காசாவில் காணப்படும் துன்பத்தின் அளவு சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது என தெரிவித்துள்ள அவர்கள், ஹமாஸ் தன்னிடம் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் இரு தரப்பிலும் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2-ம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதனால் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...