அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலிகான் மஹ்மூதாபாத் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
அவரது கைது கல்விக்கான சுதந்திரத்திற்கு மத்திரமின்றி அவர் தமக்கு கற்பித்த வழிகாட்டிய கொள்கைகளையும் கடுமையாக மீறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முகலாய மன்னரின் கடைசி வாரிசான அசோகா பல்கலைக்கழகத்தின் போராசிரியாக கடமைபுரிகின்ற அலிகான் மஹ்மூதாபாத் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்காக கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டு 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய இறைமைக்கு இவரது பதிவு அச்சுறுத்தலாக இருப்பதாக ஹரியானா மாநில மகளிர் கமிஷனின் தலைவி ரேனு பாத்தியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுக்கு காரணமாக சொல்லப்படுகிற அவரின் பேஸ்புக் பதிவில்,
கர்னல் சோபியா குரேஷியை பலரும் பாராட்டுகிறார்கள் நானும் பாராட்டுகிறேன் அவரது சேவை நாட்டுக்கு பெருமையை கொடுத்துள்ளது ஆனால் சோபியா குரேஷியை பாராட்டும் பலரும். இங்குள்ள சாதாரண முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை.
மதவாத கும்பல்களால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் அவர்களது வீடுகள் இடிக்கப் படுகின்றன அதற்கும் குரல் கொடுங்கள் சோபியா குரோஷிக்கு மட்டும் குரல் கொடுத்து பாசங்கு செய்யாதீர்கள் என பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல், அறிவியல் பேராசிரியரும், துறைத்தலைவருமான அலிகான் மஹ்முதாபாத் பெரும் கல்வியாளர்.
“காலனித்துவ இந்திய பிற்பகுதியில் முஸ்லீம் அரசியல் சிந்தனை குறித்து நிபுணத்துவம் பெற்றவர். அதைப்பற்றி ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழி அறிஞர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் மற்றும் சிரியாவில் டமாஸ்கஸ் ஆகிய 2 இடங்களிலும் அலி கான் பயின்றுள்ளார்.
1982 டிச.2ம் தேதி பிறந்த அலிகான் லக்னோவில் உள்ள லா மார்டினியர் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் 1996 வரை இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் பயின்றார். 2001-ல் வின்செஸ்டர் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்.
அவரது தந்தை சுலைமான் மஹ்மூதாபாத்திலிருந்து 2 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவும், உத்தரபிரதேசத்தின் அவாத் பிராந்தியத்தில் பிரபலமான அரசியல்வாதியாகவும் இருந்தவர் முஸ்லீம் லீக்கின் நீண்டகால பொருளாளராகவும், முக்கிய நிதியுதவியாளராகவும் இருந்தார்.
இந்நிலையில் ஹரியானா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அவருடைய மடிக்கணினி பாஸ்புக் மற்றும் ஆதார் கார்ட் அனைத்தும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு 14 நாடுகளுக்கு விஜயம் செய்த விபரங்கள் பற்றியும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
பேராசிரியர் அலிகான் தவறாக எதையும் பதிவிடவில்லை எனவும் அவருடைய பதிவு தேசப்பற்று மிக்கதாகவும் இந்தியா இராணுவத்தை பாராட்டுவதாகவே அமைந்திருந்தாகவும் அவருடைய மாணவர்கள் கூறுகின்றனர்.