அரசுக்கு ரூ.53 மில்லியன் நஷ்டம் ஏற்படுத்திய வழக்கில் இரு முன்னாள் அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

Date:

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வர்த்தகர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு  குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தியிருந்தது.

அதற்கமைய, குறித்த வழக்கு இன்று மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...