நாடளாவிய ரீதியில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் !

Date:

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள  தீவிர வானிலை காரணமாக இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவிக்கையில்,

வியாழக்கிழமை (29) இரவு 8 மணி முதல் சனிக்கிழமை (31) காலை 8 மணி வரையான 36 மணிநேரத்தில், மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு 55,940 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 17,460 முறைப்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் 31 வீதமான மின்தடைகள் சீர்செய்யப்பட்டுள்ளன என்றார்.

மின்தடைகள் குறித்து 1987 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கோ அல்லது CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...