ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தனியாளாக நின்று வீட்டோவை பயன்படுத்தி ரத்து செய்தது அமெரிக்கா

Date:

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே உடனடியாக நிபந்தனையின்றி நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை அமெரிக்கா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்திருக்கிறது.

பணயக் கைதிகளை விடுவிப்பதை பற்றி இந்த தீர்மானம் எதையும் பேசவில்லை என்று கூறியுள்ள அமெரிக்கா, தீர்மானம் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாகவும் சொல்லி இரத்து செய்துள்ளது.

அமெரிக்கா தீர்மானத்தை ரத்து செய்திருந்தாலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற 14 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

போர் காரணமாக காசாவில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. சுமார் 20 இலட்சம் மக்கள் பஞ்சத்தாலும், கடும் பனியிலும் உயிருக்கு போராடி வருகின்றனர்.

சர்வதேச நாடுகள் அனுப்பி வைத்த மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்காததால் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவின் தூதர் டொரோதி ஷியா கூறுகையில், “இந்த தீர்மானம் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகளை குறைத்து மதிப்பிடுகிறது.

நாங்கள் ஏற்கெனவே போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை முன் வைத்திருக்கிறோம்.

ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது,” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இதுகுறித்து கூறுகையில், “காசா தொடர்பான ஐ.நா தீர்மானம், ஹமாஸ் ‘பயங்கரவாதிகளின்’ நலன்களை மட்டுமே முன்னிறுத்தியுள்ளது.

ஹமாஸை கண்டித்து, அவர்கள் காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஐ.நா தீர்மானம் போட்டிருக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.

1. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை கண்டிப்பது
2. ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசாவிலிருந்து வெளியேறுவது இது இரண்டையும் அமெரிக்காவும், இஸ்ரேலும் விரும்புகின்றன. ஆனால் ஐநா தீர்மானத்தில் இது குறிப்பிடப்படாமல் இருந்தது, அமெரிக்காவை கடுப்பாக்கியுள்ளது.

இதற்கு முன்னர் ஹாமஸ்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஆனால் அது இரண்டு மாத காலத்திற்கு மட்டுமே நீடித்தது. இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியதால் போர் நிறுத்த ஒப்பந்தம் பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது.

திரும்பவும் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததின்படி, நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 45 பேர் உயிரிழந்தனர்.

அதே நேரத்தில், இஸ்ரேலிய இராணுவம் சண்டையின்போது தங்கள் வீரர்கள் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...