கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை (11) பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு புதன்கிழமை காலை 08:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சூரிய மின்சக்தி மின் கட்டமைப்பை பிரதான மின் கட்டமைப்புடன் இணைப்பு, அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை  குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...