உணவு உள்ளிட்ட உதவி பொருட்களை வாங்குவதற்காக திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: 38 பேர் கொன்று குவிப்பு

Date:

தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் செயல்படும் உணவு விநியோக மையங்களுக்கு அருகே நேற்று (ஜூன் 16) இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 38 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ரஃபா நகரத்திற்கு அருகிலுள்ள காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையத்தை அடைய முயன்றபோது கொல்லப்பட்டனர் என்றும், சில பேர் அருகிலுள்ள கான் யூனிஸ் நகரின் புறநகரில் புதிதாக திறக்கப்பட்ட மையத்திற்குச் செல்லும் வழியில் சுடப்பட்டதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் உணவு மையங்களை அடைய முயற்சிக்கும்போது தினசரி துப்பாக்கிச்சூடுகளில் மக்கள் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போர்வையில், அதிகாலை 4 மணியளவில் இஸ்ரேலிய படைகள் பலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக நடந்த இதுபோன்ற சம்பவங்களில், தங்கள் நிலைகளை நெருங்கும் சந்தேக நபர்கள் மீது எச்சரிக்கை செய்வதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறியிருந்தது.

இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை மற்றும் உதவிப் பொருட்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள், காசா பகுதியைப் பஞ்சத்தின் விளிம்பில் தள்ளியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...