ஈரானின் அணுசக்தி வசதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன:அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும்- டிரம்ப்

Date:

ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில்  தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.

தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்” என்று கூறினார்.

ஈரானில்   உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா  தாக்குதல் நடத்தியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்   தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், டரம்ப் வெளிப்படையான இராணுவத் தாக்குதலை அறிவித்துள்ளார்.

குறித்த பதவில், “ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது மிக வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

இப்போது அனைத்து விமானங்களும் ஈரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன, முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகளின் மிக அழுத்தமாக வீசப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...