இஸ்ரேல்: ஈரான் மோதல்: தமது பிரஜைகளை எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தல்!

Date:

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உலகளவில் பயண இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதால், வெளிநாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வொஷிங்டன் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளைக் காரணம் காட்டி, உலகம் முழுவதும் பயணம் செய்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது.

அதில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பயணங்களுக்கு இடையூறு விளைவித்துள்ளது மற்றும் அவ்வப்போது வான்வெளியை மூடியுள்ளது.

அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு  அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வாரம், ஆயுத மோதல்கள், பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக இஸ்ரேல், காசா மற்றும் மேற்குக் கரை போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கப் பயணிகளை வெளியுறவுத்துறை எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...