அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில்,
அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது.
தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையல்ல. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே ஆகும். ஒன்று மட்டும் ஓமானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்றார்.