புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யூ. வுட்லர் நியமனம்!

Date:

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எப். யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலுள்ள பகின்க்ஹெம்சயர் (‍Buckinghamshire) பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர், இலங்கை பொலிஸில் கடமையாற்றும் போது 2015 டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந் நாட்டின் 30 வருட காலமாக நடைபெற்ற கொடூர யுத்த காலத்தின் போது யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாகவும், நீர்கொழும்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும், வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும், தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...