சவூதி அரேபியாவில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிக்கும் அறுவை சிகிச்சை ஆரம்பம்!

Date:

சவூதி அரேபியாவின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான யாரா மற்றும் லாராவைப் பிரிக்கும் பெரும் அறுவைச் சிகிச்சை இன்று ரியாத்திலுள்ள மன்னர் அப்துல்லா சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சை, மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அறுவைச் சிகிச்சை உலக அளவில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ள ஒரு சிக்கலான மருத்துவ நடவடிக்கையாகும்.

மொத்தம் ஒன்பது நிலைகளைக் கொண்ட இந்த அறுவைச் சிகிச்சை சுமார் 15 மணி நேரம் வரை நீடிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அபூர்வமான மற்றும் நுணுக்கமான மருத்துவ செயல்பாடுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த அறுவை சிகிச்சை, சிறுவர் மருத்துவ நிபுணர்களின் குழுவால் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...