இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 43 குற்றச்சாட்டுகள்: கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்.

Date:

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி ஏபா, 3 மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 43 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டன.

பின்னர் பிரதிவாதிகளை ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 1 மில்லியன் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதோடு, அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

மேலும், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை பெறவும் உத்தரவிடப்பட்டது.

ரூ. 97 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்ததற்காக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

Popular

More like this
Related

22-வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லை; உயர் நீதிமன்றம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில்...

22 ஆவது திருத்த சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்மானம் இன்று வெளியீடு!

நாடாளுமன்றம் இன்று (22) முதல் எதிர்வரும் செப்டம்பர் 25 வரை கூடவுள்ளது. 22...

சில இடங்களில் 100 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடும்

வங்காள விரிகுடா கடற்பரப்பில், இலங்கைக்கு வடகிழக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தப்...

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...