ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான ‘மெக்குவாரி குரூப்’ (Macquarie Group) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெற உள்ளார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்யும் இவர், நிறுவனத்திலிருந்து விலகும்போது $260 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நிறுவனப் பங்குகளைக் கொண்டிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 வயதான ஷெமாரா விக்ரமநாயக்க வரும் நவம்பர் 6, 2026 அன்று பொறுப்பில் இருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக வங்கியின் நிதிச் சேவைகள் பிரிவின் தலைவராக இருக்கும் கிரெக் வார்ட் (Greg Ward) புதிய சி.இ.ஓ-வாகப் பொறுப்பேற்பார்.
1987-இல் மெக்குவாரியில் இணைந்த ஷெமாரா, 2018-இல் நிறுவனத்தின் முதல் பெண் சி.இ.ஓ-வாகப் பொறுப்பேற்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
இவரிடம் மெக்குவாரி நிறுவனத்தின் 14,74,481 நேரடிப் பங்குகள் உள்ளன. இதுதவிர, பல மில்லியன் மதிப்புள்ள கட்டுப்பாட்டுப் பங்குகளையும் (Restricted & Performance Share Units) வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் முதன்மை அதிகாரிகளில் ஒருவரான இவரது கடந்த ஆண்டின் மொத்த ஊதியம் சுமார் $21 மில்லியன் டாலராகும்.
“கோவிட் பெருந்தொற்று சவால்கள் மற்றும் புதிய சந்தைகளின் விரிவாக்கத்தின் போது மெக்குவாரி நிறுவனத்தை ஷெமாரா சிறப்பாக வழிநடத்தினார்.
