விளையாட்டு துறையில் சாதித்த புத்தளம் மாணவர்கள்: வெற்றி பதக்கங்களை வென்று சாதனை

Date:

எம்.யூ.எம்.சனூன்

விளையாட்டு துறையில் புத்தளம் நகர பாடசாலைகளை சேர்ந்த ஐந்து மாணவர்கள் கடல் கடந்து வெற்றி பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்து காட்டி இருக்கின்றார்கள்.

மலேசியாவில் நடைபெற்ற 17வது CK கிளாசிக் சர்வதேச திறந்த டைக்வுண்டோ சாம்பியன்ஷிப் (Open Taekwondo) போட்டிகளில் பங்குபற்றிய புத்தளம் மாணவர்கள் 15 ற்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று இலங்கை நாட்டுக்கும், புத்தளம் நகருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பயிற்றுவிப்பாளரும், தடகள வீரருமான இஷாரா பியூமாலி சமரகோன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்கள், புத்தளம் சாந்த அன்றூஸ் தேசிய பாடசாலை மாணவி என்.ஈ.அசேன் விஷ்மிகா மூன்று தங்கப்பதக்கங்கள், புத்தளம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பாடசாலை மாணவி ஏ.ஆர்.எப்.ஹனா மஸ்யத் சாரா இரண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.எச்.ரீமா செய்ன் இரண்டு தங்கப்பதக்கங்கள், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் எம்.எம்.ஷாதின் அஹமத் மூன்று வெள்ளி பதக்கங்கள் என 15 பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்து காட்டியுள்ளனர்.

இந்த வெற்றி வீரர்கள் ஐவரையும் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்கின்ற நிகழ்வு புத்தளம் நகர மத்தியில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது.

புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அவர்களோடு புத்தளம் பீனிக்ஸ் அகடமி நிர்வாகமும் இணைந்து இந்த ஊர்வல நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்திருக்கின்ற பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையிலே நடைபெற்ற இது தொடர்பான பிரதான நிகழ்விலே புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் உள்ளிட்ட வெற்றி வீரர்கள் கேக் வெட்டி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

 

Popular

More like this
Related

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர்...

Rainco நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஃபௌஸ் அவர்களின் மனைவி காலமானார்

இலங்கையின் வர்த்தகத் துறையில் முன்னிலை வகிக்கும் Rainco (Pvt) Ltd. நிறுவனத்தின்...

எரிபொருள் விநியோக முறைகேடுகளுக்கு 119 தொலைபேசி வசதி

QR குறியீடுகளின்றி  சட்டவிரோதமாக எரிபொருள் பெறும் சம்பவங்களை முறைப்பாடு செய்வதற்கு   119...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (17) நாட்டின் மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களின் பல...