அரகலயை அடக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விதித்த அவசரகாலச் சட்டம் மனித உரிமை மீறலாகும்: நீதிமன்ற தீர்ப்பு

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில்  அரகல போராட்டத்தை அடக்குவதற்கு விதிக்கப்பட்ட அவசரகால  தடைச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை  மீறுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2 ஆவது விதிமுறையின் கீழ் பிரகடனப்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகள் தன்னிச்சையானதும் அதிகாரமற்றதுமான செயற்பாடென மூவரடங்கிய நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.

தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, அர்ஜுன ஒபேசேகர மற்றும் யசந்த கோடகொட ஆகிய நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்தினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக  உயர் நீதிமன்றம்  இன்று தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொள்கை மாற்றுகளுக்கான மையம், முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...