பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

Date:

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (18) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

2025 கல்வி ஆண்டிற்கான தமிழ், சிங்களம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை கடந்த ஓகஸ்ட் 07 ஆம் திகதி முதல் நேற்று (17) வரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதல் கட்டட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை விடுமுறை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை இடம்பெறும்.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் (20) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) வரை 5 நாட்கள் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) – பஹன மீடியா குழுமத்திற்குமிடையே நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பு!

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக "தூய இலங்கை" எனும் மகுடம் தாங்கி...

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316,000 வாகனங்கள் இறக்குமதி...

சமச்சீரற்ற ஒத்திசைவு: இலங்கை தனது பன்முகத்தன்மையை ஒரு பலமாக மாற்ற முடியுமா?

-ரிசா யெஹியா சிரேஷ்ட பொறியியலாளர். இலங்கையில் மீண்டும் மீளும் சமூகத் தகராறுகள் உடனடி பிரச்சினையை...

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக,...