*பொறுப்பான அரசாங்கமாக எதிர்காலத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: பிரதி அமைச்சர் முனீர்*

Date:

ஒரு பொறுப்பான அரசாங்கமாக எதிர்காலத்தில் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் மிகவும் சோகமான மற்றும் வேதனையான அத்தியாயத்தை நினைவுபடுத்தும் சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு  காணாமல் போனோர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர்  ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் இன்று (29) காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.

கடந்த காலங்களில், நாடு எதிர்கொண்ட போர் சூழ்நிலை காரணமாக, அரசியல் துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் அதிக அளவில் இருந்ததாகக் கூறினார்.

பொறுப்புணர்வு கொண்ட ஒரு அரசாங்கம் என்ற வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான பணிகளை தனது அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொள்ளும் என்று திட்டமிடல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதிவான 10,000-க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து மீண்டும் விசாரணைகள் தொடங்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்துள்ளதோடு, ரூ. 375 மில்லியன் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு அலுவலகத்திற்கு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டாய மாயமாதல் என்பது குற்றம் என்றும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவை அரசு கொள்கையின் மையமாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) நிறுவப்படும் என்றும், நியாயமான நீதி வழங்கும் புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாயமானோரின் குடும்பங்களுக்கு ஆதரவாக முழுமையான இழப்பீட்டு அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...