இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்தது துருக்கி: வான்வழி மூடல்; கப்பல்கள் செல்லத் தடை!

Date:

இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்ரேலின் போர் விமானங்கள் துருக்கியின் வான்வெளி பரப்பு மற்றும் துறைமுகங்களை பயன்படுத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை தான் முக்கிய காரணமாகும்.

பலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போருக்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே துருக்கி ஜனாதிபதி அர்தூகான்  இஸ்ரேலை கடுமையாக கண்டித்தார். அதுமட்டுமின்றி காசாவில் இனப்படுகொலையை இஸ்ரேல் செய்வதாக சாடினார்.

ஆனால் இஸ்ரேல் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. காசாவிற்காக துருக்கி சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட மருத்துவமனையை குண்டு வீசி அழித்தது. இது துருக்கியை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. அதோடு இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று துருக்கி கேட்டது. இருப்பினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துவிட்டார்.

இந்நிலையில், தான் இஸ்ரேலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் துருக்கி சார்பில் அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துருக்கி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹகன் ஃபிடன் கூறியதாவது:

‛‛மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் முழு பிராந்தியமும் மோதலில் மூழ்க கூடும். இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.

இஸ்ரேல் உடனான வர்த்தகம் மற்றும் அனைத்து பொருளாதார தொடர்புடைகளும் துண்டித்துள்ளோம். இஸ்ரேலின் விமானங்கள் துருக்கி வான்வெளி பரப்பை பயன்படுத்தவும், இஸ்ரேல் கப்பல்கள் துருக்கியின் துறைமுகத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துருக்கி கப்பல்கள் இஸ்ரேல் துறைமுகத்துக்கு செல்லாது” என்றார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...