காத்தான்குடி பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக, புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பார்வையிட்டபோதே இதனை தெரிவித்தார்.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான தேவையான வசதிகளை உருவாக்கும் நோக்கில் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது காத்தான்குடி பிரதேசத்திற்கு ஒரு புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.